தொழிலதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை கொள்ளை - ஓட்டுநர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். 

நுங்கம்பாக்கம் லேக் வியூ அவென்யூவில் வசித்து வரும் அபுபக்கர் என்ற தொழிலதிபரின் வீட்டில் கடந்த மாதம் 2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, கொள்ளை தொடர்பாக அபுபக்கர் வீட்டின் கார் ஓட்டுநர் சந்திரபரியாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அபுபக்கர் வீட்டின் பணிப்பெண் சாந்தா, ஓட்டுநர் சந்திரபரியா உதவியுடன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, அவரது சொந்த நாடான நேபாளத்திற்கு தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேபாள போலீசார் உதவியுடன் சாந்தா மற்றும் உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தினரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

Night
Day