நாயை லிஃப்டில் அழைத்து வர எதிர்ப்பு - சிறுவனை சரமாரியாக தாக்‍கிய பெண் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பெல்ட்டால் கட்டப்படாத நாயை லிஃப்டில் கொண்டு வரக்‍கூடாது என கூறிய 8 வயது சிறுவனை சரமாரியாக அடித்த பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கவுர் சிட்டி-2 என்ற அடுக்‍குமா​டி குடியி​ருப்பு ஒன்றில் வசிக்‍கும் சிறுவன் டியூஷன் முடிந்து தனது வீட்டுக்‍கு செல்ல லிப்டில் தனியாக ஏறியுள்ளான். அப்போது ஒரு தளத்தில் அதே லிஃப்​டில் பெல்டால் கட்டப்படாத தனது வளர்ப்பு நாயுடன் ஒரு பெண் சென்றுள்ளார். நாயை கண்டு அச்சமடைந்த அந்த சிறுவன், லிஃப்டில் நாயை அழைத்து வர வேண்டாம் என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்தப்பெண் 8 வயது சிறுவனை சரமா​ரியாக அடித்துள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த பெண்ணை கைது செய்தனர். 

Night
Day