நாடாளுமன்ற கட்டடத்துக்கு வாஸ்து சரியில்லை என்ற வாஸ்து நிபுணர் மோசடி புகாரில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் வாஸ்து சரியில்லை என்று கூறியிருந்த வாஸ்து நிபுணர் குஷ்தீப் பன்சால், 65 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு பழைய நாடாளுமன்ற நூலகத்தில் வாஸ்து சரியில்லாததால் அடிக்கடி ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுவதாக தெரிவித்து பிரபல வாஸ்து நிபுணரான பன்சால் பரபரப்பை கிளப்பினார். வாஸ்து பார்ப்பதை தொழிலாக கொண்ட பன்சால், அரசு ஒப்பந்தத்தை பெற்று தரும் தரகராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் டெல்லியை சேர்ந்த சபர்வால் ட்ரேடிங் கம்பெனி பன்சால் மீது 65 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தது. இதையடுத்து வாஸ்து நிபுணர் பன்சால், அவரது சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day