புதுக்கோட்டை: குடும்பத்தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி - ஜீவிதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம்  முற்றி போய், கோவம் அடைந்த ரெங்கசாமி, ஜீவிதாவை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வடகாடு போலீசார்  ரெங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

varient
Night
Day