க்ரைம்
திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டில் 58 சவரன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பணவடலி சத்திரம் பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிவந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 30 லட்சம் மதிப்பிலான 58 சவரன் நகைகள் காணாமல்போனது தெரியவந்தது. இதுகுறித்து தங்கதுரை அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...