தங்கக் கடத்தல் நடிகை ரன்யா ராவிற்கு உதவியது யார் - பாஜக-காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவிற்கு உதவி செய்ததாக பாஜகவும் காங்கிரசும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.  

கைது செய்யப்பட்டவுடன், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் இரண்டு அமைச்சர்களை நடிகை அணுகி பிரச்சனையிலிருந்து தப்பிக்க உதவுமாறு கேட்டதாக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். அப்பட்டமான நெறிமுறை மீறல்கள் அரசின் செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, வழக்கு CBIயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இதனை உறுதிப்படுத்தட்டும் என்றார். அதேநேரத்தில், பசவராஜ் பொம்மை தலைமையிலான முந்தைய பாஜக அரசு, எஃகு ஆலை அமைக்க ரன்யா ராவுக்கு நிலம் ஒதுக்கியதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Night
Day