பீகாரில் பிரபல நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் பட்டப் பகலில் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் 25 கோடி மதிப்புள்ள நகைகள் கெள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்பூர் மாவட்டம் கோபாலி சவுக் பகுதியில் உள்ள அந்த பிரபல நகைக் கடைக்குள் முகத்தை மூடியபடி பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 முதல் 7 பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில், நகைகளை அள்ளிக் கொண்டு அரை மணி நேரத்தில் தப்பிச் சென்றனர். 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக நகைக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பித்தபோது, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

Night
Day