சுட்டெரிக்கும் வெயில் - திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ள கட்டுப்பாடு - தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, மதுரை ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தினந்தோறும் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலின் தாக்கதால் கட்டிட தொழிலாளர்கள் சிலர் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என, அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை மே மாதம் இறுதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day