சென்னை தனியார் பள்ளியில் தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் தனியார் தின்னர் ஆலையில் பற்றிய தீ அருகில் இருந்த தனியார் பள்ளி வளாகத்திற்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும், தீ அருகில் இருந்த தனியார் பள்ளி வளாகத்திற்கும் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கரும் புகையால் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஏராளமான மீதி வண்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக பள்ளிக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது.

Night
Day