தமிழகத்தில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடை விடுமுறை மற்றும் அதிகபடியான வெப்பம் காரணமாக  ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்புக்கு பதில், தற்போது 10ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Night
Day