திண்டுக்கல்: பொதுமக்களை அச்சுறுத்திய 11 ரவுடிகள் அதிரடி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பொதுமக்களை அச்சுறுத்திய 11 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிவார பகுதியில் மணி மற்றும் பாலன் என்பவரை ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி தனிப்படையினர், சூதாட்டம், கொலை முயற்சி, அடிதடி செய்த குற்றங்களுக்காக போக்கிரி பூபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 11 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Night
Day