திருப்பத்தூர்: குடிநீருடன் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் நகர பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பத்தூர் 8வது வார்டு பகுதியான எல்லம்மன் கோயில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் குடிநீரில் கழிவுநீர் மற்றும் புழுக்கள் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த மக்கள், இந்த குடிநீரை குடித்த 4 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

Night
Day