தென்காசி: சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு - 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வீராணம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் சுரேஷ் என்பதும், சுரண்டையில் நாகராஜ் என்பவரிடம் இருந்து வெடி மருந்துகள் வாங்கி வெடிகுண்டு தயாரித்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 30ம் தேதி வீராணத்தில் உள்ள அரசுப்பள்ளியில் நாட்டு வெடிகுண்டை வெடித்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜ், சுரேஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

Night
Day