பழனி முருகன் கோயிலுக்கு செல்போன்களை எடுத்து சென்ற பக்தர்களுக்கு அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் எடுத்துசென்ற பக்தர்களுக்கு அபராதம் விதித்து அதனை கட்டவில்லையெனில் செல்போன்களை உண்டியலில் போடுவதாக கூறியதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனதிற்கு சென்ற பக்தர்கள் பலர் செல்போன்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதைக் கண்ட கோயில் ஊழியர்கள் ஒவ்வொரு செல்போனுக்கும் பக்தர்களிடம் 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். அபராதம் கட்டவில்லை என்றால் செல்போன்களை உண்டியலில் போட்டு விடுவதாக கோயில் ஊழியர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Night
Day