புதுக்கோட்டை - டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்

எழுத்தின் அளவு: அ+ அ-

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடக்கோரி புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடக்கோரியும், பணி நிரந்தரம் செய்யவும் கூடுதல் பணிச்சுமையை நீக்கவும் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்றும் புதுக்கோட்டை டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில், அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவரும் கடை சாவியுடன் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 126 அரசு மதுபானக் கடைகளை மூடிவிட்டு, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day