தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போதே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள பாஜக வலுவான கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது.

இத்தகைய சூழலில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள பியூஸ் கோயல், மகாராஷ்டிராவை சேர்ந்தவர். 61 வயதான இவர் பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

அதனடிப்படையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பியூஸ் கோயலை நியமனம் செய்து கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளராக அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் பைஜயந்த் பாண்டாவை நியமனம் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day