பெரியகுளத்தில் பெண்கள் கூட்டுறவு தொழில் சங்கத்தின் மூலம் தைக்கப்படும் சீருடைகள் : அளவெடுத்து தைக்க பிறப்பித்த உத்தரவால் பெண்கள் ஆவேசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசுப் பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் கூட்டுறவு தொழில் சங்கத்தின் மூலம் தைக்கப்படும் சீருடைகள் அளவெடுத்து தைக்க வேண்டும் என சமூகநல துறை அதிகாரி சியாமளா தேவி பிறப்பித்த உத்தரவால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
ஆயிரத்து 680 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் கூட்டுறவு தொழில் சங்கத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு  சீருடை தைக்கும் பணி நடைபெறுவது வழக்கம். இதற்காக அரசு 22 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக நலத்துறையின் இந்த உத்தரவால், ஆவேசமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. 

Night
Day