சேலம் : கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு : கருப்புக்கொடி, போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, தமிழக அரசு சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டியும், போஸ்டர் ஒட்டியும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இடங்கணசாலை நகராட்சியிலுள்ள சின்ன ஏரி பகுதியில் தமிழக அரசு சார்பில் 8.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. இவ்விடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டியும், போஸ்டர் ஒட்டியும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

varient
Night
Day