எழுத்தின் அளவு: அ+ அ- அ
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் திருவுருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலவருமான குமரி ஆனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். இதனிடையே, தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்றார். அவருடன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் சென்றனர். இதையடுத்து அங்கு, குமரி அனந்தனின் திருவுருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் தனது தந்தை இறந்த செய்தியை கேட்டதும், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பதிவு செய்தது பெரும் ஆறுதல் அளித்தது என்று கூறினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்ததை கண்டு எனது தந்தை விண்ணில் இருந்து மகிழ்ந்து இருப்பார் என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் தமிழில் பேசியது, பாதயாத்திரை செய்தது என்று அனைத்தும் தெரிந்து கொண்டு அமைச்சர் அமித்ஷா வந்ததாக கூறினார்.