புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் - நாகூர் தர்கா, சிறப்பு தொழுகை

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் எம்.எச் ஹாஜா சம்சுதீன் சாஹிப் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், மறைந்த மாண்புமிகு அம்மாவிற்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சி அமைந்திட வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பிஸ்கட், பூந்தி வழங்கப்பட்டது.

Night
Day