ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப்போராட்டம் 30வது நாளை எட்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 4 தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 30வது நாளை எட்டியுள்ள நிலையில் 4 தூய்மை பணியாளர்களும் உடல் சோர்வுற்ற நிலையில் உள்ளனர். 2 ஆயிரம் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க விளம்பர திமுக அரசு மீண்டும் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை வழங்க வேண்டும் என்றும் முதலில் தூய்மை பணியாளர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day