திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு அருகே தென்னமநாடு நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். விவசாயம் செய்து வரும் இவர், தனது நிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சை சென்றுகொண்டிருந்த திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திமுக எம்எல்ஏவின் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day