மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிவலாயங்களிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

Roll Visual
டெல்லி மகிபால்பூரில் உள்ள சிவ மூர்த்தி கோயிலில் சிவன் தரிசனம் வேண்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிவராத்திரி விரதமிருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சிவனை தரிசனம் செய்து வழிபட்டனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிவாரத்திரியை யொட்டி சிவனுக்கு வேத மந்திரங்கள் முழங்க சங்கு மூலம் பெண்கள் பாலபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஷிவாலா பாக் பையான் கோயிலில் மகா சிவராத்திரியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதேபோன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டது. நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் சிவன் அருள் பெற்று சென்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயிலில் அதிகாலை ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகளை கொண்டு கேதார்நாத் கோயிலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மணல் சிற்ப கலைஞர் அஜய் குப்தா வடிவைத்துள்ள இந்த கேதர்நாத் கோயில் மாதிரியை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

Night
Day