எந்த மொழியும் திணிக்கப்படவில்லை - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தி உள்ளிட்ட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் பேட்டி அளித்த அவர், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து தமிழகத்தில் வெடித்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். அதில் மாணவர்களிடம் போட்டியை உருவாக்கவும், சரி சமமான வாய்ப்பை ஏற்படுத்தவும் பொதுவான தளத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை பொதுவான தளமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான், தாம் அனைத்து மொழிகளையும் மதிப்பதாக கூறினார்.

பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்வி கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய அவர், நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்று கூறினார். தமிழகத்தில் உள்ள ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தர்மேந்திர பிரதான், அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழியாக இருக்கலாம் என்று கூறினார். 

Night
Day