இந்திய மாணவர்களால் அமெரிக்‍காவுக்‍கு ஆண்டுக்‍கு ரூ.69,000 கோடி வருவாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் அந்நாட்டுக்கு ஆண்டுக்‍கு சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அறிக்‍கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்கா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்க கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் இந்திய மாணவ, மாணவியரை அந்த நாட்டு அரசு தக்க வைத்துக் கொள்வதால் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், 3 லட்சத்துக்‍கும் மேற்பட்ட வலுவான இந்திய மாணவர் சமூகம் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 69 ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பதாகவும், பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்திய மாணவர்களுக்‍கு விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்‍கா பின்பற்றி வருகிறது.

Night
Day