ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இம்மனு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தற்போது உள்ள நிலை தொடரும் எனக் கூறி இந்துக்கள் பூஜை செய்ய தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், இந்துக்கள் தெற்கு வாயில் வழியாக சென்று  பாதாள அறையில் பூஜை செய்து கொள்ளலாம் எனவும், இஸ்லாமியர்கள் வடக்கு பாதையில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் எனக் தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கில் இறுதி முடிவு எட்டப்படும் வரை இதே நிலை தொடரும் என உத்தரவிட்டனர். 

Night
Day