ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமஜென்மபூமி விவகாரத்தில் கிடைத்த தீர்ப்பை போலவே ஞானவாபி மசூதி விவகாரத்திலும் தீர்ப்பு வரும் என அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சர்ய சத்யேந்திர தாஸ் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி கோயிலின் ஒரு பகுதிதான் என தொல்லியல் துறை ஆய்வு முடிவுகள் கூறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அங்கு பூஜைகள் நடைபெறுவதை தடுக்க முடியாது என கூறினார். ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாகவும், ஹிந்துக்கள் தரப்பில் ஆதாரங்கள் இருப்பதால் அயோத்தி ராமர் கோயில் வழக்கு போலவே தீர்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். 

Night
Day