10 ஆண்டுகளில் தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு இரு மடங்கு உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகா்வோர் செலவின ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல், கிராமப்புற விளிம்பு நிலை ஏழைகள் நாளொன்றுக்கு 46 ரூபாய் மட்டுமே செலவழிப்பதும் தெரியவந்துள்ளது. தற்போதைய விலையில் சராசரி தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு நகா்ப்புறங்களில் கடந்த 2011-12-ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 630 ரூபாயாக இருந்ததும், கடந்த 2022-23-ஆம் ஆண்டில் அது 6 ஆயிரத்து 459 ரூபாயாக இருமடங்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் 1,430 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 773-ஆக உயா்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தனிநபா் வருமானம் நகா்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.

Night
Day