நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் தாயகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு கடத்தப்பட்ட 104 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் இன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. 

கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றவுடன், சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி முதலில் கொலம்பியா நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா நேற்று தொடங்கியது.

அதன்படி முதல் கட்டமாக இந்திய குடியேறிகளுடன் டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து நேற்று புறப்பட்ட C-17 அமெரிக்க ராணுவ விமானம், இன்று பிற்பகல் 1.59 மணிக்கு ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 79 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கிய 104 பேரை வரவேற்க காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் காத்திருந்தனர். அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதியும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். 

நாடு கடத்தப்பட்டவர்களின் ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டன. எனினும் அவர்களை தடுத்து வைக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தேவையான அனைத்து சோதனைகளும் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். சுமார் 18,000 சட்டவிரோத இந்திய குடியேறிகள் அமெரிக்க அதிகாரிகளால் நாடு கடத்தப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day