எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி சட்டமன்ற தேர்தலில் குடியரசுத்தலைவர் திரௌபதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினர்.
டெல்லி குடியரசு தலைவர் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது வாக்கை செலுத்தினார்.
டெல்லியின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த துணை குடியரசுத்தலைவர் ஜக்தீப் தன்கர் ஜனநாயக கடமை ஆற்றினார்.
டெல்லி நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது வாக்கை செலுத்தினார்.
துக்ளக் கிறஸன்ட் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மத்திய வெளியுறவுத்துறை ஜெய்ஷங்கர் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
ஆனந்த் நிகேதன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது குடும்பத்தினருடன் இணைந்து வாக்களித்தார்.
புது டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம்ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா தனது வாக்கை செலுத்தினார்.
நிர்மன் பவனில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது வாக்கை செலுத்தினார்.