பெண்கள், பழங்குடியினர், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்' - பிரியங்கா கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு மக்களவைத் தொகுதியில் பெண்கள், பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க நடவடிக்கை எடுப்பேன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தொகுதி மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராகுல்காந்தியுடனான வயநாட்டின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதியாக இது தனது முதல் பயணமாக இருக்கும் என்றும் ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.  ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்காக போராடுவதுதான் தனது வாழ்வின் மையமாக இருக்கும் என்றும்  நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்

varient
Night
Day