மேற்குவங்கத்தில் 25,000 ஆசிரியர்கள் பணி நீக்க விவகாரம் - குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி  25 ஆயிரம் ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி, ஒரே நேரத்தில் பல ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால்  லட்சக் கணக்கான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று  குறிப்பிட்டுள்ளார். எனவே  இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Night
Day