ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை -ரிசர்வ் வங்கி அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி என கருதப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

வட்டி விகிதம் 5 புள்ளி 5 சதவீதமாக நீடிக்கும் என அவர் தெரிவத்துள்ளார். மேலும், வளர்ந்து வரும் பொருளாதாரம், நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5 புள்ளி 5 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கமளித்தார். 

அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாக கூறிய மல்ஹோத்ரா, அமெரிக்கா வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

Night
Day