விவசாயிகள் போராட்டம் குறித்த எக்ஸ் கணக்குகள் முடக்கம் : மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயிகள் போராட்டம் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய எக்ஸ் கணக்குகளை முடக்கக்கூறிய, மத்திய அரசின் முடிவுக்கு எக்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க விவசாயிகள் போராட்டம் தொடர்பான தரவுகளை எக்ஸ் நிறுவனம் முடக்கிய நிலையில், மத்திய அரசின் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என எலான் மஸ்க் கூறியுள்ளார். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்ஸ் நிறுவனம், சமூக ஊடகங்களில் மக்களின் கருத்துகளை பதிவிட அனுமதிக்கவேண்டும்  என வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் எக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day