அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும்- நடிகர் விஜய்சேதுபதி

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மமிதா பைஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜய்சேதுபதி, அஜித்துடன் பணியாற்றும் வாய்ப்புகள் இதுவரை அமையாமல் போய்விட்டதாகவும், கண்டிப்பாக அவருடன் படம் பண்ணும் நிகழ்வு நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவர்கள், சமூக வலைதளங்களில் எது தேவை? எது சரி என்பதை மட்டும் பார்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்

Night
Day