நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பிய ஒடிசியஸ் விண்கலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க தனியார் நிறுவனமான இண்ட்யூட்டிவ் மெஷின்ஸ் அனுப்பி ஒடிசியஸ் விண்கலம் நிலவின் முதல் காட்சியை படம்பிடித்து அனுப்பியது. ஹவுஸ்டனை சேர்ந்த இண்ட்யூட்டிவ் மெஷின்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த ஒடிசியஸ் விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி 50ஆண்டுகளுக்கு பிறகு முதல் புகைப்படத்தை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. நிலவின் தரையிறங்கிய போது அதன் கால் ஒன்று நிலவின் மேற்பரப்பில் சிக்கிய போதிலும் தனியார் நிறுவன விஞ்ஞானிகள் கோளாறை வெற்றி கரமாக சரி செய்தனர். அதன் பின்னர் நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து ஒடிசியஸ் விண்கலம் அனுப்பிய நிலையில், அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் ஒடிசியஸ் வெளியிட்டுள்ளது.

Night
Day