அகமது அல் ஆஸ்திரேலியாவின் ரியல் ஹூரோ - உலகத் தலைவர்கள் பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது துணிச்சலாக செயல்பட்டு கொலையாளியிடம் இருந்து துப்பாக்கியை பிடிங்கிய அகமது அல் என்ற ரியல் ஹூரோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரில் ஒருவரை, அங்கிருந்த நபர் துணிச்சலுடன் மடக்கிப்பிடித்து அதே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதுதொடர்பான காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.  துப்பாக்கியைப் பறித்து துணிச்சலாக செயல்பட்ட நபர், சம்பவத்தின் போது ஏற்பட்ட குண்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவர் 43 வயதான பழக் கடை உரிமையாளர் அகமது அல் அகமது என்பது தெரியவந்துள்ளது. இந்த  துணிச்சலான செயலில் ஈடுபட்ட அவரை, ஒரு உண்மையான ஹீரோ என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வரான கிறிஸ் மின்சும் பாராட்டியுள்ளனர். அவரது துணிச்சலின் விளைவாக ஏராளமான மக்கள் உயிருடன் உள்ளனர் என்று மின்ஸ் கூறியுள்ளார். அவர் மிகவும் துணிச்சலான நபர் என்றும், அவரது நடவடிக்கை பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். 

Night
Day