ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கொரிய நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தென் கொரிய வரலாற்றில் அதிபர் ஒருவர் கைதாவது இதுவே முதல்முறையாகும். கடந்த மாதம் அந்த நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய அதிபரின் நடவடிக்கையால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பையடுத்து யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணைக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு அவர் ஆஜராகாததால், யோலை கைது செய்ய அதிகாரிகள் முயற்சித்தனர். இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், அதிபர் மாளிகை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி யூன் சாக் யோலை கைது செய்தனர்.  

Night
Day