நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டுகோள் - சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டு மாடு அழிந்து வரும் இனமாகிவிட்டதால், நாட்டு மாடுகளை நாம் பாதுகாக்க வேண்டும் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி வலியுறுத்தியுள்ளார். 

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, நாட்டு மாடு அழிந்து வரும் இனமாக வருவதால் நாட்டு பசுவை நாம் அதிகம் பெருக்க வேண்டும் என தெரிவித்தார். பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது விவசாயம் சார்ந்ததாகவும், விவசாயத்தின் முக்கிய கூறாக நாட்டு மாடு இருப்பதாகவும் கூறிய அவர், நாட்டு மாடுகளை நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். 

Night
Day