கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை - டிஜிபி பதிலளிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் அறை எடுத்து தங்கி பயின்று வரும் நிலையில் Snapchat மூலம் பழக்கம் ஏற்பட்ட 17 வயது மாணவியை அறைக்கு அழைத்து  கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர்கள் 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக டிஜிபி 3 நாட்களில் பதிலளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

Night
Day