சேலத்தில் நடைபாதையில் உறங்கியவர் தலையில் கல்லைபோட்டு கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலத்தில் தலைமீது கல்லைப் போட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக யாசகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைப் பகுதி மாநராட்சி அலுவலகம் அருகே உள்ள நடைபாதையில் உறங்கிய 45 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சென்ற டவுன் போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி, அருகில் இருந்த யாசகரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் அருகே இருந்த யாசகர் நெத்திமேடு பகுதி பிரபாகரன் என்பதும், இருவரும் சம்பவ தினத்தன்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதும் தெரிந்துள்ளது.

Night
Day