பெரம்பலூரில் ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் வீட்டு வரி ரசீது செலுத்த லஞ்சம் வாங்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது புதிய வீட்டிற்கான வரி ரசீது போடுவதற்காக நகராட்சி வரி வசூல் மையத்தில் பணிபுரியும்  பில் கலெக்டரை அணுகி உள்ளார். அப்போது அவர் 25,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் வேல்முருகன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரசாயணம் தடவிய பணத்தை போலீசார் வேல்முருகனிடம் கொடுத்து சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக் கொண்ட சிவக்குமார் அங்கிருந்த இடைத்தரகரிடம் கொடுத்துள்ளார். இதனைப்பார்தத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லஞ்ச பணத்தை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.

Night
Day