ரயில் பயணியிடம் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னையில் இருந்து அரியலூர் வந்த ரயில் பயணியிடமிருந்து ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அரியலூர் ரயில் நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் திருட்டை தடுக்கும் நோக்கில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, சென்னையிலிருந்து அரியலூருக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது, உள்ளே 500 ரூபாய் கட்டுக்‍களாக ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஹவாலா பணம் ஒரு கோடி ரூபாய் மற்றும் அதனை கொண்டு வந்த வினோத்குமாரையும். ஒப்படைத்தனர். 

Night
Day