எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கையில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர், சாலை கிராமத்தில் சிலர் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி வருவதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனால் இவர் மீது அக்கும்பல் ஆத்திரத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியூர் சென்றுக்கொண்டிருந்தபோது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பாலு, ராஜசேகர், கவி, கார்த்திக் மற்றும் மணி ஆகிய ஐந்து பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்