பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பணி முடிந்து வீட்டிற்கு மின்சார ரயில் மூலம் சென்ற பெண் காவலர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர், திடீரென பெண் காவலரின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து சென்றது மட்டுமல்லாமல் அவரது வாயை பொத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.   

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சக்திய பாலு என்பது தெரியவந்தது. இதையடுத்து பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்டு கைதான சத்தியபாலுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை செய்த நீதிமன்றம் அவரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. தமிழகத்தில்  பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பதாக பொதுமக்கள் குமுகின்றனர்.

Night
Day