14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீசாகும் பையா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் கார்த்திக் நடித்துள்ள பையா திரைப்படம் ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் என தகவல் வெளியானது. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு பையா திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் டிராவலிங் திரில்லர் திரைப்படமாக வெளியான 'பையா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தாளம் போட வைத்தன. இந்த நிலையில் 'பையா' திரைப்படம் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் ஏப்ரல் 11ம் தேதி ரீ-ரிலீசாக உள்ளன

Night
Day