ஆம்னி பேருந்து மோதி அப்பளம் போல நொறுங்கிய கார்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 


பெங்களூருவைச் சேர்ந்த தனக்குமார் தனது காரில் சேலம் நோக்கி சென்றார். ஜூஜூவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அருகே வந்தபோது காரை சாலையோரம் லாரியின் பின்புறம் நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென ஆம்னி சொகுசு பேருந்து நின்றிருந்த காரின் பின்புறம் மோதியதில், லாரியின் பின்புறத்தில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தின் போது, காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. 

Night
Day