இரும்பு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, இரும்பு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

சிந்தலகுப்பம் பகுதியில் தனியார் இரும்பு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழிற்சாலை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்த பார்த்த போது, தொழிற்சாலை தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதுக்குறித்து, பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தொழிற்சாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Night
Day