இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெணை, கணவர், குழந்தை கண் எதிரில் 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக  வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். கோவையில் 17 வயது சிறுமியை 7 மாணவர்கள்  பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி விலகுவதற்குள் மற்றொன்று நடைபெற்றிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதையே காட்டுகிறது என கூறியுள்ளார். இதனால் தமிழக அரசு, இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Night
Day