ஏற்காட்டில் 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கீரைக்காடு பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் 3 பேர் மதுபோதையில் காரில் சென்றதாக தெரிகிறது. காக்கம்பாடி அருகில் உள்ள கொண்டை ஊசி வளையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்களை மீட்ட போது ஒருவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த 2 பேரையும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day